சென்னை: சென்னை அமைந்தகரையில்  வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த தஞ்சை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கொடுமைப் படுத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான வீட்டு உரிமையாளர் உள்பட  6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை அமைந்தகரை அடுத்த மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷார்க். இவரது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி கடந்த தீபாவளி அன்று அடித்துக்கொல்லப்பட்டார். ஆனால், அதை மறைத்துவிட்டு, அடுத்த இரு நாட்கள் கழித்து தனது வழக்கறிஞர் மூலம்  காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் அந்த குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதையடுத்து, நவாஸின் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்த காவல்துறையினர்,  குளியலறையில் இருந்து சிறுமியின் உடலை ர் மீட்டனர்.  இதையடுத்து சிறுமியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த சிறுமியின் ஆங்காங்கே காயங்களும், சிகரெட் சூடு வைத்த காயங்களும் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த சிறுமி கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நிஷாத்திடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதையடுத்து சிறுமியை கொலை செய்த,  நிஷார், அவரது மனைவி நாசியா, அவர்களுக்கு உதவிய நண்பர் லோகேஷ் உள்ளிட்ட 6 பேரை கடந்த 2 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த கொலையை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவந்தத.

இந்த நிலையில்,  சிறுமியை கொலை செய்த  வழக்கில் கைதான 6 பேரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.   வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாத், அவரது மனைவி நாசியா உள்பட 6 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.