க்னோ

ந்த ஒரு இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

ஒன்பது உத்தர பிரதேச மாநிலத 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படு தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. காசியாபாத், கெய்ர், புல்பூர், மஜவான், குண்டர்கி மற்றும் கதேஹரி ஆகிய 6 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஆர்.எல்.டி. கட்சி மீராபூர் தொகுதியிலும் சமாஜ்வாடி கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதையொட்டி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மாயாவதி செய்தியாளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார். போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் போலி வாக்குப்பதிவை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வரை, பகுஜன் சமாஜ் கட்சி எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடாது என்று அவர் அறிவித்தார். ஆனால் மக்களவை, மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.