திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 3,62,657 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அமோக வெற்றிபெற உள்ளது பெரும் வரவேற்பையும், காங்கிரஸ் தொண்டர்களிடையே புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் தொடர்ந்து வருகிறார். மொத்தம் 5,50,004 வாக்குகள் பெற்ற நிலையில், மற்ற வேட்பாளர்களை விட சுமார் 3,62,657 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறி செல்கிறார்.
மற்ற மாநிங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் எண்ணப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் (9 தொகுதி), ராஜஸ்தான் (7), மேற்கு வங்காளம் (16), அசாம் (5), பீகார், பஞ்சாப் (தலா 4 இடம்) உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன் விவரங்களும் வெளியாகி வருகிறது.
கேரளா: வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி மதியம் 1மணி வரை எண்ணப்பட்ட சுற்றுகளின் மூலம், மொத்தம் 5,50,004 வாக்குகள் பெற்ற நிலையில், மற்ற வேட்பாளர்களை விட சுமார் 3,62,657 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் 102396 பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான கம்யூனிஸ்டு வேட்பாளர் சத்யன் மொகேரி,189132 வாக்குகள் பெற்றுள்ளார்.
முன்னதாக, வயநாடு இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியுடன் நாட்டில் காலியாக உள்ள மற்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையிலான யு.டி. எப் வேட்பாளர் பிரியங்கா காந்தி, சி.பி.ஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரி மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இன்று சனிக்கிழமை (நவ.23) நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தகளில், பா.ஜ.க. 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்-6, சமாஜ்வாதி-22, ஆம் ஆத்மி-2, பகுஜன் சமாஜ்-1, ஐக்கிய ஜனதா தளம்-1, மத சார்பற்ற ஜனதா தளம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1, அசாம் தன பரிஷத்-1, மற்றவை-6, சுயேட்சை-1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில், 3 சட்டசபை தொகுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சண்டூர் தொகுதியில் காங்கிரஸ்-பா.ஜ.க. வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது. 8-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 33 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். ஷிகான் தொகுதியில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. சென்ன பட்னா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலை பெற்றது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காசியாபாத், குண்டார்த்தி, தைர், புல்பூர், கதேரி, மஜாவன் ஆகிய தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோத்தளம் மிர்பூர் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி 2 இடங்களில் (கர்ஹல், சிசா மாவு) வெற்றி முகத்துடன் இருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தில், மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் 6 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 7 இடங்களில் ஆளும் பா.ஜ.க. 16 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்தது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி 2 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.-1, ஐக்கிய ஜனதாதளம்-1, பகுஜன் சமாஜ்-1, இந்துஸ் தான் அவாமி மோர்ச்சா 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
அசாம் மாநிலத்தில், பா.ஜ.க. 2 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அசாம் கனபரிஷத் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் உள்ள 2 தொகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷ்ணகுமார் 464 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். சேலக்கரை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னிலையில் இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில், 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் விஜயப்பூர் தொகுதியில் பா.ஜ.க.வும், புத்தினி தொகுதியில் காங்கிரசும் முன்னிலை பெற்றது.
குஜராத் மாநிலத்தின் வி.ஏ.வி. தொகுதியில் காங்கிரசும்,
சத்தீஸ்கர் மாநிலம் தெற்கு ராய்ப்பூர் நகர் தொகுதியில் பா.ஜ.க.வும் முன்னிலையில் இருந்தன.
மேகாலயா மாநிலம் காம்பேக்ரே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி சார்பில் முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மாலின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா போட்டியிட்டார். மேலும் காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் குதித்தன. இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் மெஹ்தாப் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். மொத்தம் 4 சுற்றுகள் உள்ள நிலையில் 3 சுற்று முடிவில் மெஹ்தாப் 3817 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார்.