டெல்லி: 2025ம் ஆண்டு  நடைபெற உள்ள  உ.பி. மாநில  மகா கும்பமேளா குறித்து, அங்கு சென்று  நேரடி ஆய்வு செய்ய பிரதமர் மோடி உ.பி. செல்கிறார்.  செல்கிறார் பிரதமர் மோடி. டிசம்பர்  13-ந்தேதி நேரில் ஆய்வுசெய்யும் மோடி, அங்கு ராமன் சிலை திறப்பு, கங்கா ஆரத்தி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள உள்ளார்.

இதையொட்டி நாடு முழுவதும் 13,017 ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

 

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. அதன்படி 2025  ஜனவரி மாதம் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.  இந்த கும்பமேளாவில்  45 கோடி பக்தர்கள் வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகவுல், அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும்  பாதுகாப்பிற்காக யோகி அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதையொட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பக்தர்களை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்ப காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிற்து.  மேலும் கூட்டத்தில் தொலைபோனவர்களை கண்டு பிடிக்கும் வகையில்,   சமூக ஊடக தளங்கள் மற்றும்  உதவி  மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இவைகள், டிசம்பர் 1 முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகா கும்பமேளாவையொட்டி, நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்களின்  வசதிக்காக வழக்கமான 10,100 ரெயில்களுடன் 2,917 சிறப்பு ரெயில்களை ரெயில்வே துறை இயக்க உள்ளது. மொத்தம் 13,017 ரெயில்கள் பிரயாக்ராஜுக்கு வந்து செல்ல இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்தும் புறப்பட உள்ளன. பிரயாக்ராஜ் அருகில் உள்ள ஷிருங்வேர் பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.  இதுதொடர்பாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கடிதத்தில் இத்தகவலை கூறி உள்ளார்

இதற்கிடையில் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13-ந்தேதி பிரயாக்ராஜ் வருகிறார். அப்போது சில முக்கிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.  முன்னதாக பிரயாக்ராஜ் அருகில் உள்ள ஷிருங்வேர் பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்த மடமானது, ராமாயணத்தில் ராமரை படகில் அழைத்துச் சென்ற நிஷாத்ராஜ் எனும் குகன் பெயரில் செயல்படுகிறது. இங்கு குகனுடன் இணைந்த ராமரின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார்.

ஷிருங்வேர்பூரில் இருந்து பிரதமர் மோடி, கங்கை நதி வழியாக க்ரூஸர் வகை சிறிய கப்பலில் பிரயாக்ராஜுக்கு பயணிக்கிறார். பிரயாக்ராஜின் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.