டெல்லி: நீட் வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வரும் நிலையில்,  தற்போது 5 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே 4முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 5வது குற்றப்பத்திரிகையாக குறிப்பிட்ட 5 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு குளறுடிகள் காணப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என கூறியதுடன், தேர்வு முடிவுகளை மையம் மற்றும் நகரம் வாரியாக வெளியிட கூறியது.  மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது.

முன்னதாக, நீட்  தேர்வுக்கு ஒரு நாள் முன்பு பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது விசாரணையில்  தெரியவந்தது. இதே போல ஜார்க்கண்ட், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடை பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்படி, ஜூன் 23ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகின்றது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்த சிபிஐ, எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட பலரை கைது செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ தரப்பில் 4 முறை துணை குற்றப்பத்திரிகை பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து நவம்பர் 22ந்தேதி விசாரணையின்போது   5வது துணை குற்றப்பத்திரிகை ல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகையில் திட்டமிட்டு தேர்வு தாள் கசிவை செயல்படுத்திய முக்கிய நபரான பொகாரோவை சேர்ந்த அமித் குமார் சிங் உட்பட 5 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான  வழக்கில் இதுவரை 45 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் இருக்கின்றனர்.

‘நீட்’ மறுதேர்வு கிடையாது! உச்சநீதி மன்றம் உத்தரவு…

நீட் முறைகேடு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை தூக்கியது சிபிஐ…