சென்னை; விழுப்புரத்தில் நடைபெற உள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மருந்து வழங்குவார் என  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுதமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், ‘மக்களைத் தேடி மருத்துவம்’. இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி,  தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவது. மேலும்,  நுரையீரல், வாய், கர்ப்பப்பை மற்றும் புற்றுநோய் தொடர்பான அனைத்து பரிசோதனைகள் செய்யப்படுவதுடன்,   மாற்றுத்திறனாளி குழந்தைகள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள் என பல்வேறு தரப்பினரையும் கணக்கில் எடுத்து சிகிச்சை அளிக்க ஒருங்கிணைத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கல்லீரல் பாதித்தவர்கள், டயாலிசிஸ் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது போன்ற பணிகளும் இத்திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில்   நடந்தது.  இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பயனர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டத்தின் கீழ் ல் 65 ஆயிரத்து 503 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தில் உருவான மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறி வருகிறது. 2 கோடி பயனாளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது.

 விழுப்புரத்தில் வரும்  29-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில்,இ  ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்குவதுடன்,   மக்களை தேடி மருத்துவத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு முததலமைச்சர் மு.க.ஸ்டாலின் ருந்து வழங்குகிறார் என தெரிவித்துள்ளார்.  இந்த திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியை திருப்பசாவடி மேடு, கோவிந்தபுரம், ஏணதி மங்கலம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச மருந்து பெட்டகத்தை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.