சென்னை
நாளை திமுக எம் பிக்கள் கூட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
வரும் நவம்பர் 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக இக்கூட்டம் கூட்டப்படுகிறது”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel