உக்ரைன் தலைநகர் கிவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவை அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தூதரகங்களும் மூடப்படும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா வான்வழி தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்ரைனில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ள நிலையில் வான்வழி தாக்குதல் தொடர்பான சைரன் சத்தம் கேட்கும் போது அமெரிக்கர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ரஷ்யா மீதான அமெரிக்க ஏவுகணை தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்காவுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது.