இந்திய உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் பயணித்து சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் பண்டிலக மற்றும் முகர்த்த தினங்களையொட்டி விமானப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.17) ஒரே நாளில் 505,412 பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர்.
ஒரே நாளில் 5 லட்சம் பேர் பயணித்திருப்பது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இது உள்நாட்டு விமான போக்குவரத்தில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக விமானப் போக்குவரத்துக் கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் குளிர்காலத்திலும் இதேபோல் அதிகப்படியான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
124 விமான நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் 25007 விமான சேவைகள் இயக்கப்படுவதாகவும் கடந்த அக்.27-இல் இருந்து 2025, மார்ச் 29 வரையிலான குளிர் காலத்தில் 125 விமான நிலையங்களில் இருந்து வாரத்திற்கு 24275 விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2023ம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போது விமானங்களின் எண்ணிக்கை 5.37 சதவீதம் அதிகரித்துள்ளது.