மும்பை
இன்று காலை 7 மணி முதல் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
வரும் 26 ஆம் தேதியுடன் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவி காலம்நிறைவு பெறுவதையடுத்து மராட்டியத்தில் நவம்பர் 20-ந் தேதி (அதாவது இன்று) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘மகாவிகாஸ் அகாடி’ கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன.
இன்று காலை 7 மணி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் வாக்குப்பதிவு \ தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத்தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந்தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
மேலும் உத்தரபிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.