ஐதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வரை விமர்சித்த  பி.ஆர்.எஸ். கட்சியின்  சமூக ஊடக செயற்பாட்டாளரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் காவல்துறையினரை கடுமையாக விமர்சித்துடன், கைது செய்யப்பட்டவரை சிறைக்கு அனுப்ப மறுத்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் விமர்சித்தால், இரவோடு இரவாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது தமிழ்நாடு அரசு. இதற்கு நீதிபதிகளும் துணை போகிறார்கள். ஆனால், உச்சநீதிமன்றமோ, ஆட்சியை விமர்சிப்பவர்களை கைது செய்யக்கூடாது என கூறி உள்ளது. ஆனால், அதை மதிக்காத நிலையே தொடர்ந்து வருகிறது. ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் நபர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர்,  ரேவந்த் ரெட்டிக்கு எதிராக பி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக செயற்பாட்டாளர் கோனதம் திலீப்.  கருத்து பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை  போலீசார் கைது செய்து  சிறையில் அடைக்கக்கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை சிறையில் அடைக்க மறுத்து விட்டதுடன், அவரை கைது செய்தது நியாயமில்லை என கூறி விடுதலை செய்தது.

முன்னாள் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக செயற்பாட்டாளர் கோனதம் திலீப். இவர் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் இவர் தெலுங்கானா டிஜிட்டல் டைரக்டராக இருந்தவர். இவர்  தற்போதைய காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராகவும், அவரது ஆட்சிக்கும் எதிராகவும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்.

இதனால், கடுப்படைந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி,  கோனதம் திலீப்பை கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்மீது அவதூறு வழக்கை பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்த போலீசார் அவரை நீதித்துறை காவலில் (சிறையில் அடைக்க) உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் போலீசாரின் மனுவை நிராகரித்து, சிறையில் அடைக்க உத்தரவிட மறுத்துவிட்டது. இதனால் திலீப் விடுதலை செய்யப்பட்டார்.

விசாரணையின்போது, நான் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதால் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முதலும் கடைசியும் அல்ல. எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்து போராடுவேன் என திலீப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திலீப் கைது செய்யப்பட்டதற்கான முழு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என கூறிய நீதிபதி,   இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்த வழக்கறிஞர், கீழ் நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கும் மனு நிராகரிக்கப் பட்டுள்ளது எனக் கூறினார்.

திலீப் கைதுக்கு பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திலீப் விசாரணைக்கு அழைக்கப்பட்டு சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டார் என்றார். ரேவந்த் ரெட்டி அரசு எத்தனை முறை சட்டவிரோத கைதுகளால் ஜனநாயகத்தை கொல்லும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் அரசின் தோல்விகளை பிஆர்எஸ் அம்பலப்படுத்துவதால், முதல்வர் ரேவந்த் ரெட்டி ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்று கேடிஆர் கூறினார்.

இதுபோன்ற கைதுகளால் குரலை அடக்க முடியாது என்றார். இந்த சட்டவிரோத கைது இந்திரா காந்தியின் அவசரகால நாட்கள் என்பது இந்திரம்மா ராஜ்ஜியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ரேவந்த் ரெட்டியின் விதிகளின் கீழ் இந்த சட்டவிரோத கைதுகள் மற்றும் பொய் வழக்குகள் ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள கொடுங்கோன்மையை நினைவூட்டுவதாகவும் கேடிஆர் குற்றம் சாட்டினார். சட்டவிரோத கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பிஆர்எஸ் பயப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.