சென்னை: மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண அம்மாநில பாஜக முதல்வர் பைரோன் சிங் பதவி விலகுவதே சிறந்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மெய்தி மற்றும் குகி ஆகிய இரு சமூக மக்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தமோதல் காரணமாக இரு தரப்பைச்சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று வரை இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தரப்பினரை கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிப்பூர்பற்றி எரிகிறது. இதைத்தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு கலவரக்காரர்கள் பிரச்சினை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறத. மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி அதிரடியாக விலகியது. பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், டெல்லியில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டமுடிவின்படி, அங்கு அமைதியை நிலைநாட்ட 5000 ஆயுதப்படை காவலர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து, பேசியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மணிப்பூரில் மேலும் 5,000 மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது அம்மாநில பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல. அம்மா முதலமைச்சர் பைரன் சிங்தான் மணிப்பூர் பிரச்னைக்கு காரணம். அவரை பதவியில் இருந்து நீக்குவதே அறிவார்ந்த செயல் என பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தி உள்ளார்.
உண்மையான மாநில சுயாட்சி இருந்தால்தான் மெய்தி, குக்கி-சோ, நாகா மக்கள் மணிப்பூரில் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வர வேண்டும் என கூறியிருப்பதுடன், பிரதமர் மோடி பிடிவாதத்தை விட்டுவிட்டு மணிப்பூருக்குச் சென்று அம்மக்களின் கஷ்டங்களையும், கோரிக்கைகளையும் பணிவுடன் கேட்டறிவதே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் வன்முறை அதிகரிப்பு: மணிப்பூரில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம்…