டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததை அடுத்து GRAP ஸ்டேஜ் 4 நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, தேசிய தலைநகரில் காலை 7 மணிக்குப் பதிவு செய்யப்பட்ட காற்றின் தரக் குறியீடு 483 ஆக இருந்தது.

இதையடுத்து டெல்லி காற்றின் தரம் கடுமையான பிளஸ் வகைக்கு சென்றதை அடுத்து காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல் திட்டம் (GRAP-IV) 4ஐ செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து தவிர இதர போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதுடன் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் மாசு அளவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், காற்றின் தரக்குறியீடு 450க்கு கீழ் குறைந்தாலும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள GRAP-IV நடைமுறையை நீதிமன்ற உத்தரவு வரும்வரை நீக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

GRAP-IV நடைமுறையை அடுத்து டெல்லியில் தடை செய்யப்பட்டுள்ளவைகளின் பட்டியல் :

GRAP-IV உத்தரவின்படி, அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது சுத்தமான எரிபொருளை (LNG/CNG/BS-VI டீசல்/எலக்ட்ரிக்) பயன்படுத்துவதைத் தவிர்த்து டில்லிக்குள் டிரக் இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல்.

EVகள் மற்றும் CNG மற்றும் BS-VI டீசல்களைத் தவிர, டெல்லிக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற இலகுரக வணிக வாகனங்களும் தடைசெய்யப்படும்.

டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட BS-IV அல்லது பழைய டீசல் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளைத் தவிர, தடை செய்யப்பட்டுள்ளன என்று குழு தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் இணைப்புகள், குழாய்கள் மற்றும் பிற பொதுத் திட்டங்கள் உட்பட அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மோசமான காற்றின் தர நிலைகளுக்கு மத்தியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் கற்பித்தல் பரிந்துரைக்கப்பட்டது.

NCR இல் காற்று மாசுபாடு நெருக்கடி மோசமடைந்ததால், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அலுவலகங்கள் 50% திறனில் வேலை செய்ய வேண்டும், மீதமுள்ளவை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மேலும், தில்லியில் நச்சுப் புகை மூட்டத்தின் அடர்த்தியான அடுக்கு காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று குழு தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு மாறுமாறு பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆஃப்லைன் வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் கல்லூரிகளை மூடுவது, அத்தியாவசியமற்ற வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது மற்றும் ஒற்றைப்படை-இரட்டை வாகன விதிகளை அமல்படுத்துவது போன்றவற்றையும் முடிவு செய்யலாம்.