சென்னை: நெல்லை அருகே கங்கைகொண்டானில்  146 ஏக்கரில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது. இது நெல்லை மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம்  கங்கைகொண்டானில் ஏற்கனவே டாடா நிறுவனத்தின் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு சோலார் பேனல் தொழிற்சாலை  அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.

ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பசுமை ஹட்ரஜன் மற்றும் சோலார் மின்னுற்பத்தி தொடர்பான தொழிசாலைகள் அதிகளவில் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலியில் ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்நிலையில், நெல்லை கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனம் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சோலார் மாடியூல் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழில் மைய வளாகத்தில்  பல்வேறு தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்களை கொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாடு அரசின் தொழிற்துறை இறங்கி உள்ளது.

எற்கனவே இங்குள்ள சிப்காட்டின் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா சார்பில் டாடா டிபி சோலார் லிமிடெட் என்ற பெயரில் சோலார் பேனல் தயாரிக்கும் பிரம்மாண்ட தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. சுமார் 3000 கோடி மதிப்பீட்டில்  313.53 ஏக்கரில்   கட்டப்பட்டு வரும் இந்த தொழிற் சாலையால்,  தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000  இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில்,   டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மேலும் ஒரு சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனம் அங்கு தொடங்க தமிழ்நாடு அரசின் சுற்றுச்சுசூழல் ஆய்வு நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.