ஜெயங்கொண்டம்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை, அரியலூரில் ரூ.174 கோடி மதிப்பில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தபின் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று களஆய்வு செய்துவரும் முதலமைச்சர் ஸ்டாலின், காலை கருணாநிதி சிலையை திறந்த வைத்தார். பின்னர் 15ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புவழங்கும் புதிய ஷூ ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து, அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், அரியலூரில் ரூ.174 கோடி மதிப்பில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தபின் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பேசும்போது, அரியலூரில் பல திட்டங்களை தீட்டியதால் கம்பீரமாக உங்கள் முன் நிற்கிறேன் என்றவர் அரியலூருக்கு மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்தார் .
அரியலூரில் 3 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு என்றவர், அரியலூரில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய தடுப்பணையும், ரூ.15 கோடியில் 35 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டடம் கட்டப்படும்’ என்றும் உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் விசிக எம்.பி. திருமாவளவன் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வருகை தந்துள்ளதையடுத்து, பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.