கடலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில், கரடிசித்துார் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சுற்றுசுவர்களில் பைபில் வாசகங்களை எழுதப்பட்ட பேப்பர் ஒட்டப்பட்டிருந்தது. இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற முறைகேடான செயல்களை செய்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என அந்த பகுதி இளைஞர்கள் வெகுண்டெழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினல், கோவில் சுவர்களில் மாற்று மத வாசகங்கள் எழுதி ஒட்டப்பட்ட பேப்பரை அகற்றியதுடன், இதை ஒட்டியது யார் என விசாரரித்து வந்தனர்.

இந்த நிலையில், பைபிள் வாசகங்களை கோவில் சுவரில் எழுதி ஒட்டிய பாதிரியாரை கைது செய்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் உள்ள சிவன், பிள்ளையார், பெருமாள் உள்ளிட்ட கோவில்களின் சுற்று சுவர்களில், கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் பைபிள் வாசகங்களை சார்ட் பேப்பரில் கையால் எழுதி ஒட்டி சென்றனர்.

அதில், சிலைகளை ஒழித்து கட்டுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். மேலும், ‘பொதுமக்களுக்கு ஒரு கண்டனம்’ என்ற தலைப்பில் ‘இப்படிக்கு அந்நியன்’ என்ற பெயரில் பல கருத்துக்களை எழுதியிருந்தனர்.

கோயில் சுவற்றில் ‘பைபிள் வாசகம்’ ஒட்டப்பட்டதை கண்ட கச்சிராயபாளையம் மக்கள் கொதிப்படைந்தனர். மேலும், இதை ஒட்டியவரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என பேசிக்கொண்டனர். ஆனால் ஒரு சில பெரியவர்கள் இதுகுறித்து காவல்தறையில் புகார் அளிக்கலாம் என்று கூறி கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சந்தானம் மகன் கிறிஸ்துராஜ்,34: என்பவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கிறிஸ்துராஜ் பாதிரியார் பயிற்சி முடித்து, வீட்டின் அருகில் திருச்சபை அமைத்து, தான் சார்ந்த மதம் குறித்து பொது மக்களுக்கு போதனை செய்து வருகிறார். அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கோவில்களுக்கு சென்று வருகின்றனர். இவர் நடத்தும் திருச்சபைக்கு மக்கள் அதிகம் வராததால் ஆத்திரமடைந்த கிறிஸ்துராஜ், கடந்த மாதம் அப்பகுதி கோவில் சிலைகளை சேதபடுத்தி உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவில் சுவர்களில் மதம் சார்ந்த வசனங்களை எழுதி ஒட்டி உள்ளார். அவரை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.