சென்னை: 2021 சட்டமன்றதேர்தலின்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அரசின் கொள்கை முடிவு என்ன? என தலைமைச் செயலக சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தரப்பில் நீட் ஒழிப்பு, பழைய ஒய்வூதியம் என பல்வேறு உறுதிமொழிகளை அள்ளிவீசி ஆட்சியை பிடித்தது. ஆனால், பல வாக்குறுதிகள் நிறைவேற்றடாமல் இருந்து வரும் நிலையில், பெண்களுக்கு இலவச பேருந்து, மாதம் ரூ.1000 மற்றும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் பணம் வழங்கி மக்களின் மனநிலையை மாற்றி வருகிறது.
இந்த நிலையில், திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மௌனம் சாதித்து வருவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். ஸ்டாலின் வாக்குறுதி அளித்தபடி, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், இதனால், அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்,
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக அரசு, 40 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதி திட்டத்தை எள்ளளவும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகறிது.
கடந்த சில நாட்களாக இந்த விவகாரங்கள் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், 2026 ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக்குவோம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், 2026 சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள் அதிமுகவுக்கு வாக்காளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறியிருந்தது. இதை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார். இதுதொடர்பான மோதல் நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், 2021 சட்டசபை தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மீதான அரசின் கொள்கை முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கை குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புதல், ஈட்டிய விடுப்பு சரணடைதல் மற்றும் அரசுப் பணியிடங்களில் காலியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அரசு மௌனம் சாதிப்பதால் ஊழியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், “அரசு வேலைகளுக்கு அவுட்சோர்சிங் ஊழியர்களை அரசாங்கம் அறிவிக்காத கொள்கையை ஏற்றுக்கொள்கிறது, அதே நேரத்தில் 4 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த நடைமுறை சமூக நீதி மற்றும் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.