புல்டோசர் நடவடிக்கை போன்ற மேலாதிக்க செயல்களுக்கு சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் சில மாநிலங்களில் இடிக்கப்பட்டதை கண்டித்த உச்சநீதிமன்றம் இதுபோன்ற நடவடிக்கையை நிறுத்துமாறு கடந்த செப்டம்பர் 17ம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய பெஞ்ச் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நீதிமன்றத்தால் மட்டுமே கண்டறிய முடியும்; குற்றத்தை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது.

ஒருவர் குற்றவாளியா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க முடியும் நீதிமன்ற விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்று கண்டித்தார்.

மேலும், சட்டவிரோத இடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறினர்.

தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதற்கு எதிராக புதிய நெறிமுறைகளை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.