சென்னை: பறக்கும் ரயில் இன்று முதல் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதிய தண்டவாள பணிக்காக பல மாதங்களாக, மவுட்ட் ரோடில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் கடற்கரையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பூங்காநகர் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சென்னை சென்ட்ரலில் இறங்கும் பயணிகள் வேளச்சேரி, மயிலை, திருவான்மியூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பறக்கும் ரயில் இன்று முதல் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால் பூங்கா ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வந்ததால் அங்கு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் திங்கள்கிழமை (நவ.11) முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது