மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மும்பையில்  வெளியிடப்பட்டு உள்ளது.  இதில்,  அதில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற மகா விகாஸ் அகாடி (காங்கிரஸ் கூட்டணி) அணியினருக்கும் ஆட்சியை தக்க வைத்துக்குள்ளே  மகாயுதி கூட்டணிக்கும் (பாஜக கூட்டணி) இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதையொட்டி, இரு கூட்டணிகளும் மக்களின் வாக்குகளை பெற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த  நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் மும்பையில்  நேற்று ( நவம்பர் 10ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில் , வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 000 வழங்கப்படும் என்றும் குடும்பதலைவவிகளுக்கு மாதம் ரூ.3000  வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கவர்ச்சிகரமனா அறிவிப்புகள் வெளியிடடப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:

  • மகா லட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.
  • பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதி வழங்கப்படும்.
  • இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.
  • விவசாய கடன்களை முறையாக செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  • வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்

என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில், வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் காஸ் சிலிண்டர் விலை ரூ.450 ஆக குறைக்கப்படும். மேலும், ஒவ்வொரு நபருக்கும் 7 கிலோ ரேஷன் இலவசமாக வழங்கப்படும்.

பெண்களின் கவுரவத்தை உயர்த்தும் நோக்கில் அவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,500 கவுரவத் தொகையாக வழங்கப்படும்.
சமூக நீதிக்கான உத்தரவாதத்தின் கீழ், ஜார்க்கண்ட்டில் எஸ்டிக்கு 28%, எஸ்சிக்கு 12%, ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நோக்கில், 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேலும், ரூ.15 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
கல்விக்கான உத்தரவாதமாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பட்டயக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மாவட்டத் தலைநகரங்களில் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
விவசாயி நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில், நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.3,200 நிர்ணயிக்கப்படும். மற்ற விவசாயப் பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை 50% உயர்த்தப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.