சென்னை: நடப்பாண்டில் நடைபெற்று வந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 34 இடங்களில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 4 சுற்று கலந்தாய்வுகள் நடைபெற்றன. இறுதி சுற்று கலந்தாய்வுகள் அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 அன்று நநடைபெற்றது. இந்த சுற்றில் 1,184 காலி இடங்கள் இருந்தன. இதில், 1,058 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கலந்தாய்வு நிறைவுபெற்றது. MCC இன் சமீபத்திய அறிவிப்பின்படி, நான்கு MBBS இடங்கள் மற்றும் இரண்டு BDS இடங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. முழு சுற்று அல்லது NEET 2024 கவுன்சிலிங் செயல்முறை நவம்பர் 5, 2024 அன்று முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டது.
மேலும் காலியாக உள்ள இடங்கள் நிரப்ப ஐந்தாவது சுற்று கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து, தற்போது வரை எந்த தகவலும் இல்லை. இந்த விஷயத்தில் மருத்துவ ஆலோசனைக் குழு (எம்.சி.சி) நீட் கவுன்சிலிங் 2024 சுற்றுகள் காலியாக இருந்தால் மேலும் நீட்டிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், எந்த உறுதியும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், அனைத்துக்கட்ட கலந்தாய்வின் முடிவில், இடம் பெற்ற சிலர் தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டுள்ளனர். அதன் எதிரொலியாக சுயநிதி கல்லூரிகளில் மொத்தம் 6 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 28 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய மருத்துவ ஆணையம் அளித்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இனிமேல் அந்த இடங்களை நிரப்ப முடியாது.
இதைத்தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் இறுதிச் சுற்றில், இடங்கள் பெற்றும் கல்லூரியில் சேராத 20 மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் சேர ஓராண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பி.டி.எஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் 24 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 34 இடங்கள் காலியாக உள்ளன.
கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளதால் இந்த இடங்கள் காலியாகவே இருக்கும்.
இந்த காலி இடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.