சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் மெரினா கடற்கரையில் காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால்  திட்டிய ஜோடிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

Chennai High Court The ancient High Courts of India Madras High Court, Chennai

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த புகாரின் அடிப்படையில் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் தாக்கல் செய்த மனு கடந்த மாதம் 25ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 4 ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை வந்தபோது ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிமன்றம்து, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் இருவரும் நடந்துகொண்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்கப் போகிறீர்கள்? என்று காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பிய பின்னர், இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதில் சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.