சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், இனிமேல் அவகாசம் தர முடியாது என எச்சரித்த நீதிமன்றம், வழக்கை வரும் 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில், மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததுடன், வழக்கை வரும் 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.,
கடந்த அதிமுக அட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. சுமார் ஒராண்டுக்கு மேல் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அமைராகி உள்ளார். தற்போது, செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கு நவம்பர் 7ந்தேதி (நேற்று) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை ஒத்திவைக்க கோரினார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, , மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன், வழக்கை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.