கோலாலம்பூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் விமான எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. மாயமான விமானத்தை தேடும் முயற்சியில், ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் மீண்டும் முன்வந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன், 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி , மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்க்கு வழக்கம் போல் இரவு நேரத்தில் புறப்பட்டது MH370 விமானம். இதில், 227 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர். 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானம் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் மலேசிய வான் சேவை கட்டுப்பாட்டு அரங்கத்துடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது. திடீரென விமானம் வேறு திசையில் திரும்பி மீண்டும் மலேசியா நோக்கி அந்த விமானம் வந்தது. பின் தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது எங்கோ பறந்துகொண்டிருந்தது. அதன் எரிபொருள் தீரும் வரை அங்கேயே பறந்து கொண்டிருந்தது என்று யூகிக்கப்படுகிறது. பின்னர் அந்த விமானம் மாயமானது.
விமானம் கடலுக்குள் விழுந்ததா, அல்லது மர்ம நபர்கள் கடத்திச்சென்றார்களா என்பது குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மலேசிய அரசு மாயமான விமானத்தை தேடும் பணியை முடுக்கி விட்டது. ஆனால், எந்தவொரு தகவலும் கிடைக்காததால், அதில் பயணம் செய்தவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 4 ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் தரப்பிலும் தேடுதல் பணி நடைபெற்றது. காணாமல் போன விமானத்தின் ஒரு துரும்புகூடக் கிடைக்கவில்லை. மேலும், ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், இளம் புலனாய்வாளர்கள் தங்களுக்குத் தெரிந்த சொற்பமான தகவல்களைக் கொண்டு, MH370 தனது பயணத்தை எங்கு முடித்திருக்கும் எனக் கணக்கிட முயன்றுள்ளனர்.
ஆனால், 10 ஆண்டுகளாகியும் எந்தவொரும் தடயமும் கிடைக்கவில்லை. இதனால், அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு பெருந்துயரத்தைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், காணாமல் போன விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க உள்ளதாக மலேசிய நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி லோக் தெரிவித்து உள்ளார்.
அவரது கூற்றுப்படி, மாயமான எம்ஹெச்370 விமானம் தொடா்பான நிபுணா்களின் அண்மைக் கால அறிக்கைகள், பகுப்பாய்வுகளின் அடிப்படையில், அதை மீண்டும் தேடித் தர அமெரிக்காவின் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் முன்வந்துள்ளது. புதிய ஆய்வு விவரங்களின் அடிப்படையில், மேற்கு ஆஸ்திரேலிய கடலோரப் பகுதியில் 15,000 சதுர கி.மீ பரப்பளவில் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தேடுதல் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக ‘தி இன்டிப்பெண்டண்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்தத் தேடுதல் வேட்டையில் விமான பாகங்கள் கிடைத்தால் மட்டுமே மலேசிய அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளவும், முயற்சி தோல்வியடைந்தால் தேடுதல் செலவு முழுவதையும் தானே ஏற்றக்கொள்ளவும் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் சம்மதித்துள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
சுமாா் 12,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் அந்த விமான பாகங்களைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து, விமானங்களைக் கண்டறியும் பிரபல கப்பல் நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், எந்த விதத்திலும் விமான பாகங்கள் கண்டறியப்படாத நிலையில் கடந்த 2017 ஜனவரியில் தேடுதல் பணி கைவிடப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு தேடுதல் பணியை தொடங்கியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த முயற்சியும் தோல்வி யடைந்தது.
இந்த நிலையில், புதிய தரவுகள் மற்றும் அதிநவீன தேடுதல் கப்பல்களுடன் எம்ஹெச்370 விமானத்தை தேடித் தர ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தற்போது மீண்டும் முன்வந்துள்ளது.
[youtube-feed feed=1]