சென்னை: வங்கக்கடலில்  நாளை  குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு  சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு வருகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,  . இன்று தமிழகத்தில்  சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும், நவ-9 முதல் 12 வரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தனர். அதன்படி, சென்னையில் இன்று  காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில்  நாளை (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். 10-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அது கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான,  வட தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக,  அடுத்த வாரம் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படடுஉள்ளது.

இதற்கிடையே இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இன்று (வியாழக்கிழமை) காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.  சென்னையில்  பெய்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.