குற்றாலம்

டும் காரண்மாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று  மாலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து பிறகு நீக்கப்பட்டது

பிறகு மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதிகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர.