சென்னை: வீட்டில் வேலை செய்து வந்த 16வயது சிறுமியை கொடூரமாக சித்ரவதை செய்து, அடித்து கொன்ற வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்த சிறுமியின் உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதால், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
முகமது நிஷாத், அவரது மனைவி நஸ்ரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள், மற்றொரு வீட்டு உதவியாளர் மற்றும் நண்பர்கள் ஆகியோரால் மூன்று மாதங்களாக அந்த சிறுமி தொந்தரவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஓராண்டுக்கு முன்பு அழைத்து வரப்பட்ட சிறுமியை, சென்னை அமைந்தகரையில் உள்ள ஒருவரது வீட்டில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்களான நவாஸ், அவரது காதல் மனைவி நஷியா (இயற்பெயர் நிவேதா ) மற்றும் நவாஸ் குடும்பத்தைச் சேர்நரா சீமா (கணவர்பெயர் நஷிர் அகமது) ஆகியோர் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதில் அந்தசிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிறுமியை அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டில், துர்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு, வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர், இறந்தசிறுமியின் உடலை கைப்பற்றியதுடன், அவரை கொலை செய்த குற்றத்துக்காக நவாஷ் குடும்பத்தை கூண்டோடு கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவர், தனது வீட்டில் வேலை செய்யும் சிறுமி இறந்துவிட்டதாக வெள்ளிக்கிழமையன்று தனது வழக்கறிஞர் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், நவாஸின் வீட்டுக்கு சென்று அவரது குளியலறையில் இருந்து சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டனர். சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்களும், சிகரெட் சூடு வைத்த காயங்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நவாஸிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அந்த சிறுமி கொடூரமாக அடித்தும், சிகரெட்டைக் கொண்டு சூடு வைக்கப்பட்டும் கொல்லப்பட்டது தெரிய வந்துளளது.
1. அந்த சிறுமியிடம் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்துள்ளன. முதுகில் காயங்கள் இருந்துள்ளன.
2. முதுகிலும், கைகளிலும் அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்த காயங்கள் உள்ளன.
3. உடல் முழுக்க பல இடங்களில் சிகரெட் காயங்கள் இருந்துள்ளன.
4. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல்.. கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர்.
5. இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக கொடுமை செய்துள்ளனர். இதனால் அவரின் குடல் வெறுமையாக இருந்துள்ளது.
6.உயிரிழக்கும் வரை நடந்த கொடூர தாக்குதல்..
6. அவர் உடல் அழுகிப்போய் உள்ளது. பலியான பின் அவர் பாத்ரூமில் வைக்கப்பட்டதால் அவர் உடல் அழுகிப்போய் உள்ளது
7. அவரின் மரணம் கடுமையான காயங்கள் காரணமாக ஏற்பட்டு உள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் ஏற்பட்ட காயங்கள் அவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
8அவரின் கால், கைகளில் தசை நார்கள் கிழிந்து உள்ளன . பல நாட்களாக அவர் கொடுமை படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த 16வயது சிறுமி தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஓராண்டுக்கு முன்பு அழைத்து வரப்பட்டடு, வீட்டு வேலை என்ற பெயரில், அந்த சிறுமியை நவாஸ், அவரது மனைவி தொடர்ந்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்ததுள்ளது.
தீபாவளி , பொங்கலுக்கு கூட விடுமுறை தராமல் கொடுமை செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டதாக அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர்.
தீபாவளியன்று அதுபோல் அந்த சிறுமியை கடுமையாக தாக்கியபோது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததும் அவரது உடலை குளியறையில் போட்டுவிட்டு நண்பரின் வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இறந்த சிறுமியை அப்புறப்படுத்தலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் குடியிருந்தது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் சிக்கல் எற்படும் என தெரிந்து, வழக்கறிஞர் மூலம் புகார் கொடுத்து இறந்த சிறுமியின் உடல் எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று சிறுமியை கொன்று குளியலறையில் போட்டுவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றிவைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து முகமது நவாஸ், அவரது மனைவி, மற்றும் சகோதரி, இவர்களுக்கு உதவிய நண்பர் லோகேஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். லோகேஷ் மீது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
[youtube-feed feed=1]