சென்னை: காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்கும் சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெறவுள்ள 67ஆவது காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ள வுள்ளார். இதற்காக 15 நாள் பயணமாக அவர் இன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் வெளியிட்ட ய்திக் குறிப்பில், “2024 நவம்பர் மாதம் 05 முதல் 08 வரை ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் நடைபெறவிருக்கும் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழகக் கிளையின் பிரதிநிதியாக மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள் கலந்து கொள்கிறார். அவருடன், கூடுதல் செயலாளர், பா. சுப்பிரமணியம் அங்கு நடைபெறும் SOCATT கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
இதற்காக பேரவைத் தலைவர், கூடுதல் செயலாளர் ஆகியோர் 02.11.2024 (சனிக்கிழமை) அன்று இரவு 11.25 மணிக்கு சிங்கப்பூர் விமானம் (SQ 529) மூலம் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மலேசியா நாட்டிற்குச் சென்று, பின்பு சிட்னி நகருக்கு 05.11.2024 அன்று சென்றடையவுள்ளனர். மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று, பின்னர் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.10 மணியளவில் சிங்கப்பூர் விமானம் (SQ 528) மூலம் சென்னை வந்தடைகின்றனர்.” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்,. அவருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.