குருகிராம்
அரியானா மாநிலம் குருகிராம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய காவலர் தினத்தில் காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக குருகிராம் அணையர் அலுவலகத்தில் நடைபெற்நிகழ்ச்சியில் துறவிகள் சிலர் பஜனை பாடல்களை பாடினர்.
அப்போது காவல்துறை அதிகாரிகள் சிலர் துறவிகளின் பஜனையை கைத்தட்டி ரசித்து பார்த்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது ஹரியானாவில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அனைத்து துறைகளையும் காவிமயமாக்கி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இணையத்தில் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ஒருவர்,
“அவசர தேவைக்கு நாங்கள் 100க்கு அழைத்தால் காவல்துறையினர்பஜனை பாடலில் பிஸியாக இருப்பார்கள். இப்படி காவல்துறையினருக்கு நிகழ்ச்சி நடத்துவது அறிவியலுக்கு எதிரானது. மூட நம்பிக்கையை அதிகரிக்கும் செயல்”
என்று தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.