டெல்லி: விநாயகர் சதுர்த்தி அன்று தலைமை நீதிபதி வீட்டில் பிரமர் மோடி பூஜை செய்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சந்திர சூடு விளக்கம் அளித்துள்ளார்.

விமர்சகர்களால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் “தேவையற்றவை, தேவையற்றவை மற்றும் நியாயமற்றவை” என்று சந்திரசூட் கூறினார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர், டி.ஒய்.சந்திரசூட். இவருடைய இல்லத்தில், செப்டம்பர் 11ந்தேதி  விநாயகர் சதுர்த்தி அன்று  பூஜை நடைபெற்றது.  இந்த பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டதுடன், அவரது இடத்தில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்தார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகின.

இந்த வீடியோவை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ’’கடவுள் விநாயகர், நாம் அனைவரையும் மகிழ்ச்சி, வளம் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆசிர்வதிப்பாராக” எனப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், பிரதமர் மோடியுடன் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ,இருந்தனர்,.

இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்,. இதுகுறித்து கருத்து தெரிவித்த  மூத்த வழக்கறிஞரும் SCBA தலைவருமான கபில் சிபல், “தற்போதைய தலைமை நீதிபதி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தனிப்பட்ட நேர்மை மிகுந்த மனிதர் என்பதை தயக்கமின்றிச் சொல்ல முடியும். அதேநேரத்தில், நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தனிப்பட்ட நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக் கூடாது. இது விளம்பரப்படுத்தப்பட்டது என்பது தலைமை நீதிபதிக்கு தெரியாமல் இருக்கலாம். அது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சந்திரசூட்டின் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றதைத் தொடர்ந்து, முன்னணி வழக்கறிஞரும் ஆர்வலருமான இந்திரா ஜெய்சிங், நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான “சமரசத்தை” கண்டிக்குமாறு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

அகில இந்திய கிசான் சபாவின் தலைவரும், சிபிஐ(எம்) அரசியல் குழு உறுப்பினருமான அசோக் தவாலே, இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெறவுள்ள சி.ஜே.ஐ., ராஜ்யசபா எம்.பி அல்லது கவர்னர் பதவியை எதிர்பார்த்து பிரதமருடன் நட்பாக இருப்பதாக விமர்சனம் செய்திருந்தார்.

நீதிபதி சந்திரசூட் தனது தனிப்பட்ட விஷயங்கள் மூலம் தான் வகிக்கும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  மேலும்,  நீதித்துறையின் நடு நிலைமை மீதான நம்பகத் தன்மையை முற்றிலுமாக மக்கள் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இதற்கிடையில், தலைமைநீதிபதி சந்திரசூடு, ராமர் கோவில் வழக்கின் தீர்ப்பு கூறுவதற்கு முன்பு,   தான் கடவுளிடம் வேண்டியதாகவும் அதன்படி கடவுளிடம் வேண்டினால் அவர் வழிகாட்டுவார் என்று கூறினார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சந்திரசூடு. இவர் அக்டோபர் 10ந்தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், நன்மீதான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தலைமை நீதிபதி  சந்திரசூடு , இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என்ற பலர் யோசிக்கின்ற னர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் நிகழும் சந்திப்பின்போது தொடர்புடைய வழக்குகள் மற்றும் நீதித்துறை சார்ந்த விஷயங்கள் பேசப்படாது. விமர்சகர்களால் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் “தேவையற்றவை, மற்றும் நியாயமற்றவை” என்று சந்திரசூட் கூறினார்.

பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் போன்ற மாநிலத் தலைவர்கள் சி.ஜே.ஐ, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் வீடுகளுக்குச் செல்வது பொது வானது என்றாலும், நீதித்துறை தொடர்பான விஷயங்கள் ஒருபோதும் விவாதிக்கப்படுவது இல்லை.

“அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் நிர்வாகத்தின் தலைவர்கள் நீதித்துறை விஷயங்களை விவாதத்திற்கு வெளியே வைக்க போதுமான முதிர்ச்சியைக் காட்டுகிறார்கள். நெறிமுறை மிகவும் கண்டிப்பானதாக இருப்பதால், இன்பங்களைப் பரிமாறிக்கொள்வதைத் தவிர வேறு எந்த விஷயமும் விவாதிக்கப்படவில்லை.

ஜனநாயக அமைப்பில் எங்கள் கடமை எங்களுக்கு தெரியும், அவர்களுக்கு அவர்களின் கடமை தெரியும்” என்று சந்திரசூட் கூறினார்.

அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு, அந்தந்த மாநில முதல்வர்களை தலைமை நீதிபதிகள் சந்திக்கும் பாரம்பரியம் தனக்குத் தெரிந்ததாக சந்திரசூட் கூறினார்.

பதவியேற்ற பிறகு, நீதித்துறை உள்கட்டமைப்பு குறைபாடுகள், நிதி ஒதுக்கீடு மற்றும் தொடர்புடைய நிர்வாக பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தலைமை நீதிபதி மற்றும் மாநில தலைவர் இடையே ஒரு முறையான சந்திப்பு உள்ளது,”  இது நீதித்துறையின் சுதந்திரம் என்றும்  கூறினார்.

நீதித்துறை மீது அரசியல் தலைவர்கள் வைத்துள்ள மரியாதை அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது.  நீதித்துறைக்கான நிதியை நீதிபதிகள் ஒதுக்குவதில்லை. அரசுகள் தான் ஓதுகின்றன. நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகளுக்கு அரசு நிதி தேவை. இதற்கு தலைமை நீதிபதிகள் மாநில முதலமைச்சர்களை சந்திக்க வேண்டி உள்ளது.

நானும் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக இருந்துள்ளேன். அப்போது நான் முதல்வர் வீட்டுக்கு செல்வதும் முதல்வர் எனது வீட்டுக்கு வருவதும் சகஜமாக நடக்கும். இந்த சந்திப்புகளை நேரில் சந்திக்காமல் கடிதம் மூலம் நடத்த முடியாது.

இந்த சந்திப்புகளின்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்வர் எந்த கேள்வியும் கேட்கமாட்டார் எனவே நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று பேசியுள்ளார்.

இதன்மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.