சென்னை

சுமார் 14 மாதங்களுக்கு பிறகு கடற்கரை – வேளசேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன.

இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்றொரு பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4 ஆவது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ முடியாத சூழல் நிலவி வந்தது. ஆகவே சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆகையால், 4வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன.

தற்போது, சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது ரயில் பாதை பணி முடுவதுமாக முடிவடந்துள்ள்ற்ஊ   எனவே நாளை முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதம் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது  இது புறநகர் ரயில் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ள்து.