பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறாது என்று இஸ்ரேல் அதிபர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் அனைத்து விதமான தாக்குதலுக்கு தயாராக உள்ளது என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனி எச்சரித்த நிலையில் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு உளவு அமைப்பான மொசாத் அலுவலகம் அருகே நேற்று மாலை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியானார்கள்.
தொடர்ந்து கடந்த வாரம் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அயத்துல்லா காமெனி எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமைச்சரவைக் கூட்டங்களை பிரதமர் அலுவலகம் அல்லது ராணுவ தலைமையகத்தில் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேல் அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.