ஈரானில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கடந்த வாரம் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீதான இந்த தாக்குதலை இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உறுதிப்படுத்தின.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறிப்பிடத்தகுந்த சேதம் ஏற்பட்டதாக ஈரான் கூறியது.

இந்த நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கிடைக்கும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி தெரிவித்துள்ளார்.

“ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் தவறு செய்துவிட்டதாக கூறியுள்ள அவர், ஈரான் மக்களின் வலிமையையும் உறுதியையும் இஸ்ரேல் புரிந்து கொள்ளும் என்று எச்சரித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன் இஸ்ரேல் எடுத்த தவறான நடவடிக்கைக்கு ஈரானிய மக்களின் உறுதியையும், முனைப்பையும், வலிமையையும் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக” அவர் கூறியுள்ளார்.