சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஏற்கனவே திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இப்போதே முன்களப்பணிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டு உள்ளனார். அதன்படி, 234 தொகுதிகளிலும் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இன்று திமுக பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். மேலும், 234 தொகுதிகளி லும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல்- நீக்கல் உள்ளிட்ட பணிகள் மேற்கொளவ்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தொகுதிகளின் களநிலவரங்களை அக்கறையுடன் கேட்டதுடன், அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.