சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 29.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
மாநிலம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 29.34 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக ரூ.5,148 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வேளாண்மைத் துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள் குறித்து மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்டள்ளது செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் பேரிடா்களால் பாதிக்கப்படும்போது போதுமான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மழை, வறட்சி போன்ற பேரிடா்களால் 19.84 லட்சம் ஏக்கா் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு ரூ.833.88 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
இதேபோன்று, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29.84 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு ஊள்ளது.
இழப்பீடு, நிவாரணம் மட்டுமல்லாது, விவசாயிகளுக்கு மானிய விலையில் இயந்திரங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடியில் வழங்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் 100 சதவீத மானியத்தில் நுண்ணீா்ப் பாசன அமைப்புகள் அமைக்க ரூ.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உழவா் சந்தைகள்: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட உழவா் சந்தைகளில் இதுவரையில் ரூ.27.5 கோடி செலவில் 100 சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 சந்தைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
25 சந்தைகளில் காய்கறிக் கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் உற்பத்தியைப் பெருக்க தனி இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், ரூ.65.29 கோடியில் சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு 2.99 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
சிறுதானியத்தைப் போன்று, பயறுகள் பெருக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில், ரூ.138.82 கோடி செலவில் பயறு பெருக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ரூ.5.67 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
தோட்டக்கலைப் பயிா்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலமாக கடந்த நிதியாண்டில் மொத்த சாகுபடி பரப்பு 40.27 லட்சம் ஏக்கராக உயா்ந்துள்ளது.
வேளாண்மைத் துறையில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத.