விழுப்புரம்: 8லட்சம் பேர் பங்கேற்ற த.வெ.க மாநாட்டில், கட்சி தலைவராக நடிகர் விஜய் ‘மாஸாக’ கட்சி துள்ளிக்குதித்து மேடைக்கு வந்தது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான, தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு, இன்று விழுப்புரம் வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாநாடு, பறையாட்டம், நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. சரியாக நான்கு மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு துள்ளிக்குதித்து மாசாக வருகை தந்தார். அவரை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் அக்கட்சி தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். பின்னர், தவெக மாநாட்டில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியானது.
பின்னர் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்து சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்
விஜய். இதனைத் தொடர்ந்து மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் தவெக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய். இதையடுத்து மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.
இந்த நிலையில், மாலை 5.30 மணிக்கு விஜயை பேச அழைத்தபின், உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கிய விஜய், முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரை கட்டித் தழுவினார். அதன்பின், தனது தாயார் ஷோபனாவிடமும் ஆசி பெற்று உரையாற்றினார்.
முன்னதாக, நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த சூழலில் இன்று அக்டோபர் 25ஆம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து, அக்டோபர் 27ந்தேதியான இன்று பிரமாண்டமான முறையில் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று பிற்பகல் 3மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில்,. நேற்று இரவு முதலே பல்லாயிரம் பேர் மாநாட்டு திடலைநோக்கி வரத்தொடங்கினர். இன்று காலை மாநாட்டு வாயில் திறந்ததும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மாநாட்டு திடலில் இடம் பிடித்து அமர்ந்தனர். நேரம் ஆக ஆக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், விக்கிவாண்டி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், குறிப்பிட்டபடி, மாநாட்டு பிற்பகல் 3மணிக்கு தொடங்கியது. இந்த மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், வெள்ளை நிற சட்டை அணிந்து தனக்கே உரித்தான வேகத்தில் மாஸாக மேடையில் துள்ளி குதித்து ஏறினார். தொடர்ந்து மேடையில் போடப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
அப்போது கட்சி கொடியின் நிறத்தில் தொண்டர்கள் வைத்திருந்த துண்டுகளை அவர் மீது வீச, அதை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோளில் போட்டுகொண்டு ஜோராக வீரநடை போட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அளித்த ராணுவ மரியாதையை ஏற்றுக்கொன்று தொடர்ந்து மிடுக்கான நடைபோட்டர் தளபதி விஜய்.
பின்னர் மாநாட்டு விழா கட்சி பாடலுடன் தொடங்கி நடைபெற்றது.
நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
தவெக மாநாட்டில் விஜய்க்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது. வீரவாளின் கைப்பிடியில் இரு யானைகள் இருந்தன. விஜய்க்கு அரசியலமைப்பு சாசனம், பகவத் கீதை, திருக்குரான், பைபிள் ஆகியவை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.