சென்னை:  சட்டத்தை மீறி தொப்புள் கொடியை வெட்டியது தொடர்பான வீடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற இர்பான், தற்போது   வெளிநாட்டில் இருந்து, தனது செயலுக்கு  வருத்தம் தெரிவித்து  கடிதம் எழுதி உள்ளார்.  இதுவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர் இர்பான் என்பதால், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ, கைது செய்யவோ தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே,  இர்பான் சட்டத்தை வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அவர் மன்னிப்பு கோரியதும், தமிழ்நாடு அரசு அவரை மன்னித்து விட்டது. இது பேசும்பொருளாக மாறியது. இந்த நிலையில் இர்பான் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் தொப்புல் கொடி கட் செய்யும் வீடியோவை வெளியிட்டுவிட்டு, அது சர்ச்சையான நிலையில், வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

இதனால், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், காவல்நிலையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் இர்பான் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் மா.சுவும் இர்பானை இந்த முறை மன்னிக்க முடியாது என்று கூறி வந்தார். அவர் சென்னை திரும்பியதும், விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் தங்கியுள்ள இர்பான்,   தனது உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடித்ததின் மூலமாக தெரிவித்து மருத்துவத்துறைக்கு  கடிதம் அனுப்பியுள்ளார்.  . அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்பான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாள் செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இர்பான் விவகாரத்தில் இதுவரை காவல்துறை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது  சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.