தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 29 முதல் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என அனைத்திலும் முன்பதிவு முடிவடைந்துள்ளது.
இதையடுத்து ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய பயணிகள் போட்டி அதிகரித்ததை அடுத்து விமானம் மற்றும் பிரீமியம் ரயில் டிக்கெட் போல் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு ரூ. 1500 முதல் 3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது, மதுரை செல்ல ரூ. 1600 முதல் 4300 வரை வசூலிக்கப்படுகிறது.
இதுவழக்கமான கட்டணத்தை விட பலமடங்கு கூடுதலாக உள்ள நிலையில் குடும்பத்துடன் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்னி பேருந்துகளின் இந்த விண்ணைமுட்டும் கட்டணம் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.