வேலூர்: காட்பாடி அருகே  ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயிலின் என்ஜின்  மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில், வழக்கம்போல இன்று காட்பாடி வந்து சென்றது. இந்த ரயில்,   காட்பாடியை அடுத்த  முகுந்தராயபுரம்-திருவலம் இடையே சென்றுகொண்டிருந்தபோது, அந்த ரயிலின் எஞ்சின் மட்டும் தனியே கழகின்று எசென்றனது.  அதாவது,  என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையேயான கப்லிங் கழன்றது.

இந்த சம்பவம் நடந்தபோது டமார் என்ற சத்தம் கேட்டது.  இதனால்  பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர்.  அதைத்தொடர்ந்து பயணிகள் பெட்டிகள் மட்டும் சிறிது தூரம் ஓடி அங்கேயே நின்ற நிலையில், எஞ்சின் மட்டும் சிறிது தூரம் தனியாக ஓடியது. இதை அறிந்த ரயில் எஞ்சின் டிரைவர் உடனேய என்ஜினை ட நிறுத்தினார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு காட்பாடி ரயில்நிலைய அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, மீண்டும் எஞ்சினை ரயில் பெட்டிகளோடு இணைக்கும் பணி நடைபெற்றது.

இதனால் அந்த வழியாக இயக்கப்பட்டு வரும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.  சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு,   என்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ரயில் மீண்டும் பயணத்தை தொடர்ந்து. இதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் பயணத்தை தொடர்ந்தன.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.