டெல்லி

யில்வே அமைச்ச்ர் அஸ்வினி வைஷ்ணவ் தீபாவளியையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நகரங்களில் வந்து பணி புரியு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வகையில் பண்டிகை காலங்களில் ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இதன்படி கடந்த ஆண்டு தீபாவளிக்காக 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 7,000 ரயில்கள் இயக்கப்படும் என்று இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த சிறப்பு ரயில்கள் இயக்கம் மூலமாக தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்றும், ரயில்களில் நெரிசலைக் குறைக்கவும் மக்கள் எளிதாக ஊருக்குச் செல்லவும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தீபாவளையை முன்னிட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒரு சில ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.