அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி வருவதாக இறுதிக்கட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
‘டெசிஷன் டெஸ்க் ஹெச்குயூ-தி ஹில்’ (‘Decision Desk HQ-The Hill’) என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி முன்னாள் அதிபர் டிரம்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அவர் 52 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதேநேரம் துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால்குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜார்ஜியா மற்றும் வட கரோலினா மாகாணங்களில் டிரம்புக்கு திடீரென ஆதரவு அதிகரித்துள்ளது கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.