கோவை: கோவையில் கட்டப்பட்டு வந்த எல்காட் ஐடி பார்க் பணிகள்முடிவடைந்த நிலையில், நவம்பர் 4ந்தேதி திறக்கப்படுகிறது. இதை முதலமைச்சர் மு.கஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் 2.66 லட்சம் சதுர அடியில் எல்காட் ஐடி பார்க்க் அமைகக்ப்பட்ட உள்ளது. இதை நவம்பர் 4ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின், திறந்து வைக்கிறார். தொடர்ந்து, நகரின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளங்களை மேம்படுத்தும் வகையில் கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார்.
கோவை மாநகரம் விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடியில் எல்காட் ஐடி பார்க் உருவாக்கப்பட்ட உள்ளது. இதை ஆய்வு செய்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், இந்த திட்டம் 2020ல் அறிவிக்கப்பட்டது என்றதுடன், சுமார் 3 லட்சம் சதுர அடியில் 2 லட்சம் சதுர அடியில் அலுவலக இடம் உள்ளது. இந்த ஐடி பார்க் ஆறு மாடி கட்டிடம் என்றவர், கிட்டத்தட்ட 6 லட்சம் சதுர அடி கொண்டது என்றார்.
இங்க, ஸ்டார்ட்அப்கள் மற்றும் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்படும், மேலும் சுமார் 15,000 சதுர அடி இணை வேலை செய்யும் இடமாக ஒதுக்கப்படும். இந்த பூங்கா 3,250 வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளது என்று கூறினார்.