கனமழை காரணமாக பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் அடியோடு சரிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரின் புறநகர் பகுதியான ஹொரமாவு-வை அடுத்த பாபு சாஹிப் பாளையா-வில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று மாலை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் 20 பேர் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் அதில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விபத்து குறித்து ஹென்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல்துறை விசாரணையில் 4 மாடிக்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் 7 மாடிகள் வரை கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் ஆந்திராவைச் சேர்ந்த முனிராஜு ரெட்டி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரு : கனமழைக்கு சரிந்த அடுக்குமாடி கட்டிடம்… ஒருவர் உயிரிழப்பு 5 பேர் மாயம்…