சென்னை: சட்ட விதிகளை மீறிய இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், இர்பான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
செலிபிரிட்டிகளுடன் பல்வேறு உணவகங்களுக்கு சென்று உணவு தொடர்பான பல்வேறு வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் இர்ஃபான், நமது நாட்டின் சட்டங்களை மீறி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் சட்டத்தை மீறி தனது மனைவி வயிற்றில் வளரும் கரு ஆண்ணா, பெண்ணா என்பது குறித்து அறிவித்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில், தற்போது தனது மனைவி குழந்தை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பிறந்த குழந்தையின், . தொப்புள் கொடியை இர்பான் வெட்டும் விடியோ ஒன்றையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விவகாரம் மருத்துவ துறையில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன சட்டத்தை மீறிய இர்பானின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.
இதையடுத்து, இர்பான் தனதுவீடியோவை யுடியூபர் வலைளதத்தில் இருந்து நீக்கினார். இதற்கிடையல், இந்த வீடியோ எடுக்கப்பட்ட த தனியார் மருத்துவமனை இருக்கும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத்துறையின் ஜாயின் டெரக்ட்டர் இளங்கோவன் புகார் அளித்தார். யூடியூபர் இர்பான் மீதும் இந்த நிகழ்விற்கு அனுமதி அளித்த மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர், விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சு.விடம் செய்தியாளர்கள், இர்பான் மீது இந்த முறையாவது நடவடிக்கை பாயுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது. தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக எப்போதும் நினைக்காது. என்று தெரிவித்ததுடன், குஇர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை என தெளிவு படுத்தியதுடன், தவறு செய்தவர்களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும் என்றார்.
தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது மருத்துவ சட்டத்திற்கு எதிரானது. இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை, மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், இர்பான் கடந்தை முறை மன்னிப்பு கோரியிதும், அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோல, இப்போதும் மன்னிப்பு கோரினால் நடவடிக்கை கைவிடப்படுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர், தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது, நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை பாயும் என்று என்று உறுதி அளித்தார்.
சட்டத்தை மதிக்காத ‘யுடியூபர் இர்ஃபான்’ மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது!