சென்னை
தமிழக ரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.

அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது .
டாஸ்மாக் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்ததன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Patrikai.com official YouTube Channel