டெல்லி

தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9.3 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

What is the Employees Provident Fund Organisation (EPFO)

அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிதாக வேலைவாய்ப்பு பெறுபவர்கள், அவர்களது எதிர்கால சமூக பாதுகாப்புக்காக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) சந்தாதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள்.

கடந்த ஆகஸ்டு மாதம் இ.பி.எப்.ஓ. அமைப்பில் சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்., கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிதாக சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் இது 0.48 சதவீதம் அதிகம். தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

இது வேலைவாய்ப்பு அதிகரிப்பதையும், தொழிலாளர் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதையும் இது காட்டுவதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கூறியுள்ளது. ஆகஸ்ட் 2024 க்கான தற்காலிக ஊதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் 2024-ல் 18.53 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை இருந்தது என்றும், இது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 9.07 சதவீதத்தைக் குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.