பெங்களூரு

ந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா இந்திய அணியை 3 மணி நேர ஆட்டத்தில் மதிப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்து அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துஇந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 46 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம்.

“இந்த டெஸ்ட் போட்டி குறித்து நான் அதிகம் கவலைப்பட போவதில்லை. ஏனென்றால், முதல் இன்னிங்ஸில் அந்த மூன்று மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து இந்திய அணி எப்படிப்பட்ட அணி எனக் கூறுவது நியாயமாக இருக்காது. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் நன்றாக சரிவிலிருந்து மீண்டு வந்தோம். முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனால், இந்த போட்டியில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன.

இந்த போட்டியில் சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதன் விளைவாக போட்டியில் தோல்வியைத் தழுவினோம். ஆனால், இந்த தோல்வியோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. அதனால், இந்த டெஸ்ட் போட்டி குறித்து அதிகம் சிந்திக்காமல் இருக்க நாங்கள் முயற்சிப்போம். இந்த சூழலில் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது போட்டியில் எப்படி வலுவாக மீண்டு வருவது என்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்”

எனத் தெரிவித்துள்ளார்.