சென்னை
இன்று அதிகாலை சென்னை நகரில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது

தற்போது வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இன்று அதிகாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக எழும்பூர், கிண்டி, வேளச்சேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
அது மட்டுமின்றி செனையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதாவது ஆவடி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை மழை பெய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel