தூத்துக்குடி
தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா தமிழகம் வெளிநாடுகளுடன் போட்டியிடுவதாகவும் பிற மாநிலங்களுடன் இல்லை எனவும் கூறியுள்ளார்.

நேற்று தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம்,
“தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால், நமக்கு போட்டி எல்லாம் வெளிநாடுகள்தான்.
இரண்டு வெளிநாடுகளுடன் போட்டியிட்டு ஒரு புதிய திட்டத்தை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கான வேலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.
நமது போட்டி நாடுகளோதான், மாநிலங்களோடு அல்ல.
ஏனெனில் நமது உயரம் அந்த அளவில் இருக்கிறது.”
என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel