கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெல்காம், தார்வாட், கடக், ஹாவேரி, பெல்லாரி, தாவாங்கேரே, ஷிமோகா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தும்கூர், பெங்களூரு ரூரல் மற்றும் பெங்களூரு நகர மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலோர, தெற்கு மற்றும் வட உள் மாவட்டங்களின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடற்கரையோரங்களில் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், புயலான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.

வரும் 23ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் 21-ந்தேதி 8 மாவட்டங்களுக்கும், 22-ந்தேதி 12 மாவட்டங்களுக்கும், 23-ந்தேதி 5 மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள் எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டுள்ளது.